திருப்பூர்;

திருப்பூர் மாநகரம்தாராபுரம் சாலை புதூர் பிரிவுபேருந்து நிறுத்தம் அருகில்செயல்படும் டாஸ்மாக் பார்1996ல் விதிமுறைகளை மீறி போலி மதுபான விற்பனை அதனால் மதுப் பிரியர்கள் மயங்கி கிடக்கும் அவலம்இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து வருகின்றனர் கடை முன்னே துணி இல்லாமலல் போலி மது மயக்கத்தில்படுத்துக் கிடக்கின்றனர் கடையில் சுமார் 125 அல்லது 145 ரூபாயிக்கு விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில் இங்கே சுமார் 200 மற்றும் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தடை செய்த நேரத்தில் சரக்கு கிடைக்கிறது என்பதால் குடிமகன்களும் இந்த விலை உயர்வை சட்டை செய்வதில்லை.
அரசு டாஸ்மார்க் கடைகள்12 to 10 மணி வரை செயல்படும்பட்சத்தில் இனி காலை விற்பனை என்பது இப்படித்தான் நடக்கும். என்பதை அறிந்து கொண்டு இந்த பார் உரிமையாளர் கடை வருமானத்திற்கு கொள்ளையடிக்க கிறார் எனபுலம்பும் குடிமகன் ஆனால், குடிமகன்களின் கருத்தோ வேறுமாதிரியாக இருக்கிறது. இந்த ‘பார்காரர் கொள்ளை அடிக்கிறார் சார். ஒரு வாட்டர் பாக்கெட் டம்ளர் இரண்டும் 20ரூபாய்க்கு விற்கிறார்கள். இவர்களுக்கு அந்த வாட்டர் பாக்கெட் 60 பைசாவுக்கு கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்த பாரில் விற்கப்படும் அத்தனை அயிட்டங்களின் விலையும் 3, 4 மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. இதிலேயே அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்துவிடுகிறது’ என்கிறார்கள்.

இதிலிருந்து தப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று காத்திருந்தால் நம் கதி அதோ கதிதான். அதுவும் இல்லாமல் இந்த பாரில் டாஸ்மார்க் உயரதிகாரிகள் காண்பது அரிது. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும், வெட்ட வெட்ட துளிர்க்கும் கிளை போல சில நாட்கள் கழித்து மீண்டும் கடையை விரித்துவிடுவார்கள். இதனால் மது பிரியர்கள் வெளியில் டம்ளர் தண்ணி எல்லாம் வாங்கிக்கொண்டு ரோட்டிலும் காட்டிலும் உட்கார்ந்து சாப்பிடும் அவலம் இந்த கடையினால் நடைபெற்று வருகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *