காந்திநகர்:
பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 77 கிலோ ஹெராயினை குஜராத் கடலோர காவல் படை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் கடலோர காவல் படையினரும், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ‘அல் ஹூசைனி’ என்ற பெயருடைய பாகிஸ்தான் மீன்பிடி படகு ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் வருவதை பார்த்துள்ளனர். இதனையடுத்து படகை மடக்கி பிடித்த கடலோர பாதுகாப்பு படையினர், பயங்கரவாத தடுப்புப்படையினர் அந்தபடகை சோதனையிட்டனர்.
அந்தப்படகில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர். மேலும், அதில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படனர். அந்த ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours