திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. அமர் குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட சிறுபான்மை துறை நல அலுவலர் திருமதி. பானுமதி முன்னிலையில் மாவட்ட திட்ட அலுவலர்/ இணை இயக்குனர் திரு. செல்வராஜ் பங்கேற்ற கூட்டத்தில் உடன் மாவட்டத்தில் உள்ள முஸ்லீம், கிறிஸ்துவர், ஜெயின் மற்றும் புத்தத்தை சார்ந்த அனைத்து சிறுபான்மை சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்று சிறுபான்மையினர் உடைய கோரிக்கைகளை வலியுறுத்தினர், திருப்பத்தூர் மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் நிரப்பப்படாமல் உள்ள நில எடுப்பு வட்டாட்சியர்-1, கணக்காளர்-1,( 4 )நான்கு அலுவலக உதவியாளர்களை நிரப்ப உரிய ஆவணம் செய்யவேண்டுமென சமூக ஆர்வலர் மற்றும் முதன்மை மண்டல செய்தியாளர் நமது தேடல் கோரிக்கை வைத்தார் மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறுபான்மை நல சமூக சேவகர்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கைகளை உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் மாவட்ட சிறுபான்மை தினவிழா கூட்ட நிறைவில் மகளிர் திட்ட அலுவலர் திருமதி. உமா மகேஸ்வரி நன்றியுடன் நிகழ்வு இனிதே முடிந்தது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட சிறுபான்மை தின விழா நிகழ்வு..
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours