சென்னை:

உடல்நலம் பாதிக்கப்பட்ட ரசிகையின் மகள் தன்னை பார்க்க விரும்புவதை அறிந்த ரஜினிகாந்த் வீடியோ காலில் பேசி அந்த பெண்ணுக்கு தைரியத்தை வரவைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவரின் மகள் சவுமியா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் ரஜினியை பார்க்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார். இதை அந்த ரசிகர் வீடியோவாக வெளியிட்டு சமூகவலைதளங்களில் வைரலாக்கினார். இது ரஜினியின் கவனத்திற்கு சென்றது. பின்னர் அந்த ரசிகரின் மகளுடன் வீடியோ காலில் பேச முடிவு செய்து அவருடன் பேசினார். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சாரி கண்ணா

அந்த வீடியோவில் ரஜினி பேசுகையில் ஹலோ சவுமியா, எப்படி இருக்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. சாரி கண்ணா என்னால உன்ன வந்து பாக்க முடியாது. இப்ப கொரோனா இருக்குறதனால, எனக்கும் உடம்பு சரியில்ல.. இல்லனா உன்ன வந்து பார்த்துருப்பேன் கண்ணா… தைரியமா இரு.. உனக்காக நான் பிரே பண்றேன்.

சரியாகிவிடும்

சிரிக்கும் போது நீ எவ்ளோ அழகாய் இருக்கே.. எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அரசியலுக்கு வருவதாக ரஜினி கூறியிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அரசியலுக்கு வரும் தனது முடிவை கைவிட்டுவிட்டார்.

ரத்த குழாய் அடைப்பு

அண்மையில் கூட ரத்த குழாயில் அடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு பின்னர் 3 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அப்போது அவருக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என ஹூட் ஆப்பில் ஆடியோவாக பேசியிருந்தார்.

 

ரஜினிகாந்த்

இந்த கொரோனா காலம் என்பதால் ரஜினிகாந்த் தனது உடல்நலம் மட்டுமல்லாமல் எதிராளியின் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு ரசிகர்களை சந்திப்பதை மிகவும் குறைத்து கொண்டார். பிறந்தநாளின் போது கூட வழக்கமாக ரசிகர்கள் மத்தியில் வீட்டுக்குள் உள்ளே இருந்து பேசுவதையும் இந்த ஆண்டு அவர் தவிர்த்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *