மனம் முடித்த கையோடு.. மணமக்கள் செய்த வேலையை பாருங்க.. ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்.. வைரல் வீடியோ!.,

Estimated read time 0 min read

கன்னியாகுமரி:

நமது வாழ்க்கையில் திருமணம் என்பது வாழ்வின் ஒருமுறைதான் வரும். சிலர் ஊர் மக்கள் மெச்சும் வகையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்காக பல கோடிகள் வாரி இறைப்பதும் உண்டு. இன்னும் சிலர் வித்தியாசமான முறையில் மணம் முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வானில் பறந்தபடி திருமணம் செய்வது, தண்ணீருக்கு அடியில் திருமணம் செய்வது என்று நாம் வித்தியாசமான பலவற்றை பார்த்து இருக்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டம்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் மணம் முடித்த கையோடு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த செய்தியை காணப்போம். குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மாமூட்டுக்கடை பகுதியை சார்ந்தவர் சிவராம் இவர் தக்கலையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.

திடீரென நிறுத்தப்பட்ட கார்

இவருக்கும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அபிராமிக்கு நேற்று காலை மார்த்தாண்டத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் காரில் ஏறி மார்த்தாண்டம் அருகே உள்ள மணமகன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். மணமகனின் நண்பர்கள் வேறு காரில் பின் தொடர்ந்து சென்றனர். மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் சென்றதும் திடீரென மணமக்கள் சென்ற கார் நிறுத்தப்பட்டது.

ஊர்வலமாக அழைத்து சென்றனர்

என்ன திடீரென கார் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த நண்பர்களும் அவர்களது காரை நிறுத்தினார்கள். அப்போது அவர்களிடம் விசாரித்தபோது மணமக்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற வித்தியாசமான ஆசையை தெரிவித்தனர்.அதில் இதனை தொடர்ந்து நண்பர்கள் மணமக்களை பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர் .

அரசு பேருந்தில் பயணம்

அதன்பின்னர் மணமக்கள் இருவரும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறினார்கள். மார்த்தாண்டம் பகுதியில் இருந்து மாமூட்டுகடை வரை அந்த பேருந்தில் பயணம் செய்தனர். மாலையுடன் புதுமண தம்பதிகள் அரசு பேருந்தில் பயணம் செய்வதை பார்த்த சக பயணிகள் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். மாமூட்டுகடை என்ற இடத்தில் மணமக்கள் இறங்கி மணமகனின் வீட்டுக்கு சென்றனர். மணமக்கள் பேருந்தில் பயணம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மணமகனின் தந்தை ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் என்பதும் குறிப்பிடதக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours