சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இகாப, அவர்கள் காவல் அதிகாரிகளுடன் இன்று
(10.11.2021), பூந்தமல்லி நெடுஞ்சாலை, G-3 கீழ்பாக்கம் காவல் நிலையம்
பின்புறமுள்ள, கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று, அங்குள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டார்.
அங்கு மழைநீர் வெளியேற்ற
உத்தரவிட்டதின்பேரில், மோட்டார்
மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு
வருகிறது. மேலும், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிட்டு,
காவல் குடும்பத்தினரிடம் குறைகளை
கேட்டறிந்தார். மேலும், காவலர் குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள். ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் மற்றும் Emergency Light உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இகாப காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டார்

+ There are no comments
Add yours