செல்போன் காணவில்லை என புகார் தந்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

Estimated read time 1 min read

கோயம்புத்தூர்;

கோயம்புத்தூரில் செல்போன் காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை என்கிற பெயரில் திருநங்கைக்கு போலீசார் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது. கோவை பாப்பாநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் உமாஸ்ரீ(30). இவர் திருநங்கை. இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பல்வேறு விதமான தொண்டு பணிகள், சமூக பணிகளை தொடர்ந்து இவர் மேற்கொண்டு வருகிறார். இவரது செல்போன் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது.

விசாரணை

இதையடுத்து தனது செல்போனை கண்டுபிடித்து தரும்படி கோவை ரேஸ்கோர்ஸ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இவரின் செல்போனை கண்டுபிடிக்காமல் போலீசார் அதிகாரி விசாரணை என்கிற பெயரில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க மூவேந்தன் வேல்பாரி என்ற போலீஸ் அதிகாரி அந்த திருநங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் திருநங்கையை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

செல்போன்

செல்போன் குறித்து விசாரிக்காமல் அந்த திருநங்கையிடம் தவறாக பாலியல் ரீதியாக பேசி உள்ளார். அதோடு திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. உமாஸ்ரீ இல்லத்திற்கு செல்போன் குறித்து விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு அடிக்கடி வந்த காவலர் மூவேந்தன் வேல்பாரி, திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதல்

அதோடு அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் மோசமாக தாக்கியும் இருக்கிறார். தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாலியல் ரீதியாக உமாஸ்ரீக்கு அவர் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து தற்போது பாதிக்கப்பட்ட திருநங்கை உமாஸ்ரீ கோவை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எனது செல்போனை கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

காவலர்

காவலர் ஒருவரே இப்படி செய்வது கஷ்டமாக இருக்கிறது. என் வீட்டுக்கு வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை கண்டித்து நடவடிக்கை எடுங்கள் என்று அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸ் அதிகாரி மூவேந்தன் வேல்பாரியை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours