வடகிழக்கு பருவமழை தீவிரம் எதிரொலி: தமிழகத்தில் 3691 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.! நீர்வளத்துறை தகவல்

Estimated read time 0 min read

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் 3691 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மேலும், பல ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள 14138 ஏரிகளில் 3691 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக, அரியலூரில் 32 ஏரிகளும், சென்னையில் 3 ஏரிகளும், செங்கல்பட்டில் 197 ஏரிகளும், கோவையில் 14ம், கடலூரில் 120ம், திண்டுக்கல்லில் 38ம், ஈரோட்டில் 3ம், காஞ்சிபுரத்தில் 149ம், கள்ளக்குறிச்சியில் 127ம், கன்னியாகுமரியில் 287ம், கிருஷ்ணகிரியில் 47ம், மதுரையில் 555ம்.

நாமக்கல் 20ம், பெரம்பலூரில் 10ம், புதுக்கோட்டையில் 184ம், ராமநாதபுரத்தில் 10ம், ராணிப்பேட்டையில் 171ம், சேலத்தில் 30ம், சிவகங்கையில் 75ம், தென்காசியில் 333ம், தஞ்சாவூரில் 306ம், தேனியில் 24ம், தூத்துக்குடியில் 80ம், திருச்சியில் 27ம், நெல்லையில் 178ம், திருப்பத்தூரில் 19ம், திருப்பூரில் 5ம், திருவள்ளூரில் 158ம், திருவண்ணாமலையில் 258ம், திருவாரூரில் 2ம், வேலூரில் 53ம், விழுப்புரத்தில் 172ம், விருதுநகரில் 3 ஏரிகளும் நிரம்பியுள்ளது. அதே  நேரத்தில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 2964 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 2498 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 2505 ஏரிகளும், 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை 2066 ஏரிகளிலும் நீர் இருப்புள்ளது. 414 ஏரிகளில் மட்டுமே நிரம்பவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நிரம்பிய ஏரிகள் எவ்வளவு?

வடகிழக்கு பருவமழை காரணமாக 28 ஏரிகளை ெகாண்ட சென்னையில் 3 ஏரிகளும், 564 ஏரிகளை கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 197 ஏரிகளும், 381 ஏரிகளை கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 149 ஏரிகளும், 578 ஏரிகளை கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 158 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதே நேரத்தில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை சென்னையில் 6 ஏரிகளும், செங்கல்பட்டில் 222ம், காஞ்சிபுரத்தில் 94ம், திருவள்ளூரில் 39ம், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை சென்னையில் 16 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 132ம், காஞ்சிபுரத்தில் 44ம், திருவள்ளூர் மாவட்டத்தில் 91ம், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை  சென்னையில் 1 ஏரிகளும், செங்கல்பட்டில் 13ம், காஞ்சிபுரத்தில் 90ம், திருவள்ளூரில் 146ம், 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை சென்னையில் 1ம்,  காஞ்சிபுரத்தில் 4ம், திருவள்ளூரில் 140 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. மேலும், சென்னையில் 1ம், திருவள்ளூரில் 4 ஏரிகளிலும் நீர் இருப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours