உருவானது காற்றழுத்த தாழ்வு:
வங்க கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 11ம் தேதி வட தமிழக கரையை நெருங்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக புதுச்சேரி – கடலூர் இடையே கேரளா செல்லும்.
இது புயலாக மாற வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
****
மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 3 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னை விரைந்தது
மணலி, தாம்பரம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு மீட்புக்குழு
***
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும். இதன்காரணமாக
09.11.2021:: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
10.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்
11.11.2021: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
12.11.2021: வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
13.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்,
*சென்னையை பொறுத்தவரை
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.*
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மகாபலிபுரம் (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 12, சித்தார் (கன்னியாகுமரி), மரக்காணம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 9, சிவகிரி (தென்காசி ), மதுராந்தகம் (செங்கல்பட்டு), புதுச்சேரி (புதுச்சேரி, கன்னிமார் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 8, மயிலாடி (கன்னியாகுமரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), வளவனூர் (விழுப்புரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), பெரம்பூர் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி ) தலா 6,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதிகள
09.11.2021 முதல் 11.11.2021 வரை: தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09.11.2021 , 10.11.2021: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.11.2021,11.11.2021 : தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்
09.11.2021, 10.11.2021: மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09.11.2021: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
*****
வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர்கள் சேதமடையும் என்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் உடனே பதிவு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தல்
பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத நெல் விவசாயிகள் பதிவு செய்ய வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவுறுத்தல்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக உடனே பதிவு செய்ய வேண்டும்
***
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
==
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
==
நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்
****
சென்னையில் இன்று முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை மழை தொடரும்- நார்வே வானிலை மையம்
சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யும்
நவம்பர் 12 ஆம் தேதி மழையின் அளவு குறையும்
நவம்பர் 13-ஆம் தேதி இரவு கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் நவம்பர் 14, 15, 16 ஆம் தேதி இரவு நேரத்தில் கனமழை பெய்யும்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்
சென்னை , திருவள்ளுர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , அரியலூரில் கனமழைக்கு வாய்ப்பு
தஞ்சை, நாகை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று தீவிர கன மழைக்கு வாய்ப்பபு
****
சென்னையில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை
==
நகரின் பிரதான பகுதிகளில் நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் பால் விற்பனை செய்ய ஏற்பாடு
==
சென்னையில் கூடுதலாக பால் தேவைப்பட்டால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் நாசர்
+ There are no comments
Add yours