சென்னை, ஓட்டேரி, சூளைமேடுதெரு என்ற முகவரியில் வசித்து வந்த ஏழுமலை, வ/30, த/பெ.மாரி என்பவர் இன்று (07.11.2021) மாலை சுமார் 3.00 மணியளவில் G-5 தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, நல்லா கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதை பார்ப்பதற்காக சென்றபோது, வலிப்பு நோய் ஏற்பட்டு தவறி கால்வாயிக்குள் விழுந்துள்ளார். உடனே அருகிலிருந்த சுதாகர், வ/23, திரு.வி.கநகர், 1வது தெரு, புளியந்தோப்பு என்பவர் மேற்படி ஏழுமலையை காப்பாற்ற கால்வாயிக்குள் குதித்துள்ளார். கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் தண்ணீரில் சுதகார் அடித்து செல்லப்பட்டுள்ளார். தகவலறிந்த காவல் பேரிடர்மீட்பு குழுவினர் (Tamil Nadu State Disaster Response Force)விரைந்து செயல்பட்டு கால்வாய் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சுதாகரை பத்திரமாக மீட்டனர். வலிப்புநோய் ஏற்பட்டு கால்வாயில் விழுந்த ஏழுமலை என்பவரை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓட்டேரி பகுதியில் உள்ள கால்வாயில் வலிப்பு நோய் ஏற்பட்டு தவறி விழுந்த நபரை காப்பாற்ற முயன்று கால்வாய் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட வாலிபரை காவல் பேரிடர் மீட்பு குழுவினர் காப்பாற்றினர்.
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours