தமிழ் சினிமாவின் துருத்துருப்பான நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடியவர் அஞ்சலி. தெலுங்கில் அறிமுகமாகியிருந்தாலும் கற்றது தமிழ், அங்காடி தெரு, வத்திக்குச்சி, எங்கேயும் எப்போதும், இறைவி, பேரன்பு போன்ற பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார் அஞ்சலி.
இதனையடுத்து பல தனிப்பட்ட பிரச்னை காரணமாக சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது பாடல்களில் மட்டும் தலைக்காட்டி வந்த அஞ்சலி கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் எட்டிப்பார்த்திருக்கிறார்.
அதன்படி நெட்ஃப்ளிக்ஸில் வந்த anthology-யான பாவக் கதைகளில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் வெளியான Fall என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் அஞ்சலி.
இந்த வெப் சீரிஸின் புரோமோஷனுக்கான பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார் அஞ்சலி. அதில் ஒன்றில் தன்னுடைய ரிலேஷன்ஷிப்பில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
அதில், “தவறான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால் என்னுடைய சினிமா வாழ்க்கையை கவனிக்க முடியாமல் போய்விட்டது. அது தவறான உறவு என்பதை உணர்ந்து அதிலிருந்து வெளியேறி இப்போது எனக்கான திரை வாய்ப்பில் முழு வீச்சில் இறங்கியிருக்கிறேன். ஏனெனில் அந்த உறவைவிட என்னுடைய கெரியர்தான் சிறந்தது என்ற முடிவில் இருக்கிறேன்.” இவ்வாறு அஞ்சலி கூறியிருக்கிறார்.
முன்னதாக எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு நடிகர் ஜெய் உடன் பலூன் படத்திலும் நடித்ததை அடுத்து கோலிவுட்டின் அடுத்த நட்சத்திர couple என்றெல்லாம் ஜெய்-அஞ்சலி ஜோடி சிலாகிக்கப்பட்டது. அதுபோக தயாரிப்பாளர் ஒருவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் என்ற செய்திகளும் பரவியது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours