பிரபல இசை நிகழ்ச்சியான இதில் கலந்துகொண்ட பலரும் பின்னணி பாடகர்களாகத் தற்போது உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களுள் ஒருவர் இசையமைப்பாளர் தமன்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கானா பாடி அனைவரையும் ஈர்த்த சிறுவன் `கலர் வெடி’ கோகுல். வடசென்னையைச் சேர்ந்தவர் கோகுல். இவரது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை சூப்பர் சிங்கர் மேடையில் பாடி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர். அவர் கோகுலின் பாடலைக் கேட்டு பிரமித்து வருகிற தீபாவளிக்குள் மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில் கோகுலின் அண்ணன் பாடல் எழுதி அந்தப் பாடலை கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். ஏற்கெனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் திரைத்துறையிலும், மேடைக் கச்சேரிகளிலும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது கோகுலும் இணைந்திருக்கிறார்.
+ There are no comments
Add yours