“கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு- இறந்தவர்களுக்கு அஞ்சலி.!

Estimated read time 1 min read

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி(இன்று) இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள்.

“வேலூரில் கிறிஸ்துவர்களின் கல்லறைதிருவிழா!

உலகம் முழுவதும் இன்று நவம்பர் 02 -ம் தேதி கிறிஸ்துவர்களின் கல்லறைதிருவிழா நடத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கல்லறைதிருவிழா வேலூர் டோல்கேட்டில் உள்ள கிறிஸ்துவர் கல்லறையில் உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனை செய்தனர்( படம்) வேலூர் சிஎம்சி மருத்துவமனையை நிறுவிய ஐடா ஸ்கடர் அம்மையாரின் கல்லறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours