தூத்துக்குடி:
சாப்பாட்டில் விஷம் வைத்து கணவரை கொல்ல முயன்ற மனைவியை எட்டயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி.. 32 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி. மனைவி பெயர் இந்திரா.. 28 வயதாகிறது.. இவர்களுக்கு வைத்திஷினி முகாசினி என்ற 12 மற்றும், 8 வயது பெண் குழந்தைகள் உள்ளனர்.
மாடசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.. அதிலும் கடந்த சில மாதங்களாகவே போதையில் வீட்டிற்கு வரும் மாடசாமி, இந்திராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது… இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. சம்பவத்தன்றும் இப்படித்தான் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் மாடசாமி.. வழக்கம்போல் இந்திராவை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.
இதனால் இந்திரா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்… சிறிது நேரத்தில் சாப்பாடு போடு என்று சொல்லிவிட்டு, மாடசாமி சாப்பிட உட்கார்ந்துள்ளார்.. ஆத்திரத்தில் இருந்த இந்திரா, மாடசாமிக்கு சாப்பிட வைத்திருந்த சால்னாவில், விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை கலந்து வைத்துவிட்டார்.. பரோட்டாவையும் சால்னாவையும் சாப்பிட்டு கொண்டிருந்த மாடசாமி, திடீரென மருந்து நாற்றம் வருவதை உணர்ந்துள்ளார்.. பதறிபோன அவர் உடனடியாக வெளியே எழுந்து ஓடினார்..
அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி உள்ளார்.. அவர்களும் சால்னாவை முகர்ந்து பார்த்துவிட்டு, விஷம் இருப்பதை உணர்ந்தனர்.. அடுத்த கொஞ்ச நேரத்தில் மாடசாமி மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார்.. அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்… மாடசாமி சீரியஸாக இருக்கிறாராம்.. தற்போது தீவிரமான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.. இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்..
பிறகு போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில், “என் கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது… நிறைய சொல்லி பார்த்துவிட்டேன். அவர் குடியை நிறுத்தவில்லை.. தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தார்… இதில் ஆத்திரமடைந்த நான் அவருக்கு சால்னாவில் விஷம் கலந்து கொடுத்தேன்” என்றார் இந்திரா.. இதையடுத்து, இந்திராவை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர் போலீசார்.
+ There are no comments
Add yours