மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
இந்தியாவில் சுமார் 200 நூற்றுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல கழகங்களையும்,புரட்சி களையும், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும், நிகழ்த்தி தன்னுடயை குருதியையும், தேகங்களையும் நமது தாய் நாட்டிற்க்காக அர்பணித்த தேசதலைவர்களையும், விரர்களையும், புரட்சியாளர்களையும், நினைவு கூரும் நாள். குடியரசு தினம் ஆகும்.
ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஓற்றுமையாக இல்லாமல் இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாக பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால் வனிகம் செய்வதற்க்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள் படி படியாக தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர்.
அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. இந்தியா விடுதலைக்கு பிறகு மக்களாட்சி மட்டுமே ஓரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் என கருதி டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றபட்டு 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக கொண்டாட படுகிறது . மேலும் அந்திரு நாளில் நமது தாய் நாட்டினை அந்தியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி பாரத மண்ணில் ஓவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையில் விடு முறை அளிக்கபட்டு. நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் , தேசிய கீதம் பாடி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட பட்டு வருகிறது.
எனவே : இந்திய மக்கள் அனைவருக்கும் 75 வது குடியரசு தினம் நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours