பாரதீய மஸ்தூர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் பணி நேரத்தை இரவு 10 மணியிலிருந்து இரவு 8 மணி என நிர்ணயம் செய்யவேண்டும்.பெருகிவரும் ஓமிக்ரான் நோய்த் தொற்றிலிருந்து பணியாளர்களை பாதுகாத்திட முககவசம், கிருமிநாசினி, சானிடைசர் போன்ற மருத்துவ உபகரணங்களை அதிகப்படியாக வழங்க வேண்டும்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கிட அதிகப்படியாக விற்பனையாகும் கடைகளுக்கு,குறைந்த விற்பனையாகும் கடைகளின் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தின் தீர்மான நகலை வழங்கி, அதன்மீது விவாதம் நடைபெற்றது.
மேற்கண்ட கோரிக்கைகளை செய்து கொடுப்பதாகவும்,தீர்க்க முடியாத கோரிக்கைகளை மேலாண்மை இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் M.மகாலிங்கம் மாநில தலைவர்,K.சுப்ரமணி மாவட்ட தலைவர்,A.திசாநாயகம் மாவட்ட செயல்தலைவர், R.ஜெயக்குமார் மாவட்ட செயலாளர்,V. அன்பரசன் மாவட்ட பொருளாளர்,A.அருள்குமார் மாவட்ட பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours