ஈரோடு:
ஈரோடு அருகே பெண் காவலரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறிய வயது சிறுமிகள் முதல் வயது வந்த பெண்கள் பலரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் சம்பவங்களும் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கும் சம்பவங்களும் அதிகரித்து குறிப்பாக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் கருப்பு ஆடுகளாக மாறி பெண் காவலர்களுக்கு பொதுமக்களுக்கும் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.
அத்துமீறும் சில காவலர்கள்
இரவு வாகன சோதனையின்போது வேலை பார்க்கும் கடையின் உரிமையாளருடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளம்பெண்ணை காவலர் ஒருவர் தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மதுரை திலகர் திடல் காவல்நிலையத்தில் பணியாற்றிய அந்த காவலர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அத்துமீறிய தலைமைக் காவலர்
இதே போன்ற ஒரு அதிர்ச்சிச் சம்பவம் ஈரோட்டில் நடைபெற்றுள்ளது. இந்த முறை பாலியல் பலாத்கார கொடுமை ஆளாக இருந்தவர் காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் தலைமை காவலர். ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. அதன் அருகே வசித்து வரும் 32 வயதான செல்வன் சேலம் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார். தலைமை காவலரான செல்வனின் மனைவி ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
ஈரோடு பெண் காவலர்
சேலத்தில் பணியாற்றும் செல்வன் ஈரோட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவியுடன் பணியாற்றும் ஈரோட்டிலேயே வசிக்கும் இருபத்தி ஒன்பது வயதான ஒரு பெண் போலீசுடன் நட்பு அடிப்படையில் பழகி வந்துள்ளார் செல்வன். ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்தப் பெண் காவலருடன் நட்புடன் பழகுவதாக கூறி கெட்ட நோக்கத்தோடு கடந்த சில நாட்களாக அவரிடம் பேச்சுக் கொடுத்து வந்துள்ளார் செல்வன். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்வன் அந்த பெண் போலீசுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவசர வேலையாக தங்களை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை
என்ன என்று அந்தப் பெண் காவலர் கேட்டதற்கு மிக முக்கியமான விஷயம் நேரில் தான் கூற வேண்டும் எனக் கூறியதை அடுத்து தனது வீட்டுக்கு வருமாறு அந்த பெண் காவலர் செல்வம் அழைத்து உள்ளார். இதையடுத்து இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்ற செல்வன் பெண் காவலரின் வீட்டின் கதவை அடைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் காவலர் கதவை திறந்து வெளியே வந்து உதவி கேட்டு சத்தமிட்டார். இதையடுத்து அங்கு குவிந்த அப்பகுதி மக்கள் தலைமை காவலர் செல்வனைப் படித்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தலைமை காவலர் கைது
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர் . அதில் செல்வன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் கொலை மிரட்டல் விடுத்தல் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து செல்வனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் தற்போது ஒரு நிமிடம் சபலத்தால் தலைமைக் காவலர் செல்வன் சிறைக் கம்பிகளுக்குப் பின்னே நின்று அவற்றை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours