கோவை:

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் 31,33,128 வாக்காளர்களும், திருப்பூர் மாவட்டத்தில் 23 ,89,614 வாக்களர்களும் உள்ளனர். 01.01.2022ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்கானர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரால் வெளியிடப்பட்டது.

கோவை வாக்காளர் பட்டியல்

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15,40,901 ஆண் வாக்காளர்கள், 15,91,654 பெண்கள் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 என ஆக மொத்தம் 31,33,128 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 42,266 வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக

இதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 14,9,39 ஆண் வாக்காளர்கள், 15,60,37 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 48 வாக்காளர் என மொத்தம் 30,18,24 வாக்காளர்கள் உள்ளனர். சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 15,68, 65 ஆண் வாக்காளர்கள், 16,47,05 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,21,635 பேர் உள்ளனர். அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 237305 ஆண் வாக்காளர்களும் 239021 பெண் வாக்காளர்களும் 141 மூன்றாம் பாலினத்தவர் என 4,76,467 வாக்காளர்கள் உள்ளனர். கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில்1,73,556 ஆண் வாக்காளர்கள், 1,71,748 பெண் வாக்காளர்களும்41 மூன்றாம் பாலினத்தவர் என 3,45,145 பேர் உள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வாக்காளர்கள்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் காங்கேயம் அவினாசி பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று வெளியிட்டார். திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 11 லட்சத்து 76 ஆயிரத்து 924 ஆண்கள் , 12 லட்சத்து 12 ஆயிரத்து 381 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் 309 பேர் என மொத்தமாக 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 பேர் வாக்காளர்களாக இருப்பதாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தற்போது இருக்கின்ற வாக்குச்சாவடிகளை விட அதிகப்படுத்தி சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

தருமபுரி மாவட்ட வாக்காளர்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி இன்று வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலின் படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,43,253 பேரும், பெண் வாக்காளர்கள் 6,31,962 பேரும், இதர வாக்காளர்கள் 176 பேரும் என மொத்த வாக்காளர்கள் 12,75,391 பேர் உள்ளதாக அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *