மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேட்டில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மடிக்கணித் திட்டம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை ரத்து செய்தனர். அதனையெல்லாம் மக்கள் பொறுத்துக் கொண்டனர். 

அன்னதான விழாவில் ஆர்.பி.உதயகுமார்

ஐந்து மாவட்ட குடிநீருக்கும் , விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஜெயலலிதா சட்டப் போராட்டம் தொடர்ந்து நடத்தி அணையை 142 அடியாக உயர்த்தி கொள்ளவும், அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளவும் தீர்ப்பை பெற்று தந்தார். அது மட்டுமின்றி எட்டு முறை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக கேரளா அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.  திமுக அரசு முல்லைப் பெரியாறு பிரச்னையில் தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது. புதிய அணை கட்ட மத்திய அரசுக்கு கேரளா அரசு ஜனவரி மாதம் அனுப்பி வைத்தது. அதை பரிசீலனை செய்ய 11 கொண்ட குழுவை அமைத்துள்ளனர். முல்லைப் பெரியாறின் உரிமையை தமிழக அரசு காவு கொடுத்து விட்டது. கேரளா அரசு எடுத்து வரும் முயற்சியை எடப்பாடி பழனிசாமி தோலுரித்துக்காட்டி கண்டனம் செய்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை

ஆனால் மென்மை போக்கை கடைபிடிக்கும் முதலமைச்சர், கேரள முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார். எதற்காக இதை செய்கிறார்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா? தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா? ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த திரைமறைவு வேலையை தேர்தலுக்காக திமுக அரசு மறைத்துள்ளது.

முல்லைப் பெரியாறு உரிமை பிரச்னையில் திமுக அரசு தொடர்ந்து மென்மையான போக்கை கடைபிடித்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை அல்லது தேனியில் மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைப்பிடித்தார் என்று அண்ணாமலை கூறுகிறார். இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் வார்த்தைக்கேற்ப எடப்பாடியார் உயிரை கொடுத்து பணியாற்றி வருகிறார் .

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். இந்த வெற்றியே சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு அச்சாரமாக அமையும். 

சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை.  அண்ணாமலையின் பேச்சு அதிமுக-வுக்கு தேவைபடாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் உள்ளது, அரசியல் சூழ்ச்சி உள்ளது. அவரின் புகழ்ச்சிக்கு நாங்கள் ஒருபோதும் மயங்கமாட்டோம்.

ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை

வேண்டுமென்றால் அண்ணாமலை அதிமுக-வின் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினால் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

அவர் பாஜகவின் மறைந்த தலைவர் வாஜ்பாயை புகழ்ந்து பேச வேண்டும், தற்போதைய தலைவர் அமித் ஷாவை புகழ்ந்து பேச வேண்டும், அதை விடுத்து அதிமுக-விலுள்ள ஒவ்வொரு தொண்டனும் தெய்வமாக வணங்கக்கூடிய எங்களின் உயிர் மூச்சாக இருக்கக்கூடிய எங்கள் அம்மாவை அவர் புகழ்ந்து பேசுவது சூழ்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இதில் உள்நோக்கமும் அரசியல் சூட்சமமும் இருப்பதாகவே நினைக்கிறோம்” என்றார்.

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *