கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகர்கோவிலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில், நாங்குநேரி பகுதியில் ஏறிய காவலர் ஆறுமுக பாண்டியனுக்கும், நடத்துநருக்கும் பயணச்சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்போது பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்குமான பிரச்னையாக வெடித்தது.

காவலர் ஆறுமுக பாண்டியன்

பின்னர், இதுகுறித்து விளக்கமளித்த போக்குவரத்து கழகம், வாரண்ட் இருந்ததால்தான் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் இல்லையென்றால் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்றும் கூறியது. இதனால், பல இடங்களில், அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்மீது சீருடை முறையாக அணியவில்லை, சீட் பெல்ட் போடவில்லை என பல காரணங்களைக் கூறி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வந்தனர்.

பின்னர், இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், இப்பிரச்னை முடிவுக்கு வந்ததாக, அரசுப்பேருந்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலரும், நடத்துநரும் கைகுலுக்கி கட்டியணைத்து சமாதானமான வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள்..!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *