பிரான்ஸ்:
உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா தொற்றின் ஒமிக்ரான் திரிபு. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் ‘IHU’ என்ற புதிய கொரோனா திரிபை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த புதிய திரிபு ஒமைக்ரானை விட தீவிரமான தொற்றை பரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி இந்த தொற்று கண்டறிய பட்டிருந்தாலும் உலக சுகாதார மையம் அதனை இன்னும் உறுதி செய்யவில்லை. அறிவியல் ரீதியாக IHU திரிபை B.1.640.2 என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 46 பிறழ்வுகளை இந்த திரிபு கொண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள துறைமுக நகரமான மார்சேயில் நகரில் சுமார் 12 பேர் இந்த புதிய திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 14 நாட்களில் 16,64,346 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவல் இந்தியாவை அச்சுறுத்தி வருகின்ற நிலையில் பல்வேறு மாநிலங்களில் நோய் கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
+ There are no comments
Add yours