பெரம்பூர்:
கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவில் கோழி சண்டை நடப்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்றபோது, கோழி சண்டை நடத்திய சிலர் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், பெரம்பூர் காமராஜர் தெருவை சேர்ந்த நியமதுல்லா (32), மின்ட் பகுதியை சேர்ந்த முகமது அம்ரோஸ் (24), ஓட்டேரியை சேர்ந்த பாபு (48), கொளத்தூர் ஜவஹர் நகரை சேர்ந்த முகமது யாகூப் (23) ஆகியோர், சண்டை கோழிகளை வளர்த்து, பின்னர் பணம் வைத்து கோழி சண்டை நடத்தியது தெரியவந்தது. அவரிடமிருந்து 6 சண்டை கோழிகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours