Malayalee From India Review: சேட்டன்களின் அரசியல் நையாண்டி! நிவின் பாலி கம்பேக் தருகிறாரா? | Malayalee from India Review: This political satire has minor hiccups

Estimated read time 1 min read

பல வருடங்களுக்குப் பிறகு ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என கேமியோவில் கம்பேக் கொடுத்த நிவின் பாலிக்கு இது மீண்டும் நாயகனாக ஒரு முழுநீள படம். ஆனால் கம்பேக்?

இதுவும் ஒரு ‘கம்மிங் ஆப் ஏஜ்’ கதைதான். எந்த வேலைக்கும் செல்லாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கையில் பத்து பைசா இல்லை என்றாலும் இந்தியப் பொருளாதாரம் பேசும் கதாபாத்திரத்தில் கிச்கிச்சு மூட்டுகிறார் நிவின் பாலி. குறிப்பாக அவரது தாயாருடன் போடும் ஒன்-லைனர்கள் அடிப்பொலியானு. இருந்தும் இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான இடங்களில் ஜீவன் மிஸ்ஸிங்கானு.

Malayalee From India Review

Malayalee From India Review

அரேபியப் பாலைவனத்தில் பாகிஸ்தானியராக வரும் தீபக் செத்தி எதிர்மறையான இடங்களில் தன் நடிப்பால் வெக்கை வீசுபவர், உணர்வுபூர்வமான இடங்களில் பாலைவன சோலையாகக் கண்களைப் பணிக்கிறார். எரிச்சலூட்டும் கதாபாத்திரத்தில் தியான் ஸ்ரீனிவாசன் சரியான தேர்வு. நாயகி அனஸ்வரா ராஜனை ஒரு பாடலுக்கு மட்டும் ஒப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வழக்கமான வெட்டி நாயகனின் தாயாக நடித்துள்ள மஞ்சு பிள்ளை நடிப்பில் குறையேதுமில்லை. ஒரு காட்சியில் வந்து போனாலும் சைன் டாம் சாக்கோ அரங்கில் சிரிப்பலையை விட்டுச்செல்கிறார். சம்பிரதாய காட்சிகளில் மட்டும் பயன்படுத்தி மூத்த நடிகரான சலீம் குமாரை வீணடித்திருக்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours