சேலம்;
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்….
கைத்தறி தொழிலின் வளர்ச்சிக்காகவும் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கைத்தறி துணி விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சேலத்தில் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனை இன்று தொடங்கியது.
இந்த கண்காட்சியினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கைத்தறி துணிகளை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து 60 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்துகொண்டு அந்தந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சுத்தபட்டு சேலைகள் சேலம் வெண்பட்டு வேட்டிகள் காட்டன் சேலைகள் கோரா காட்டன் சேலைகள் செடிபுட்டாசேலைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்த விற்பனை ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது இன்று தொடங்கிய இந்த கண்காட்சி 12 1 2022 வரை 14 நாட்கள் நடத்தப்பட உள்ளது இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் ஆனந்தன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours