சேலம்;

சேலத்தில் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையனுக்கு திடீர் மாரடைப்பு……. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை………
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(73) சந்தன வீரப்பனின் அண்ணனான இவரை கடந்த 1987ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஈரோடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உறுதி செய்யப்பட்டு 1997 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 24 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வருகிறார்.

மாதையன்(73) – சந்தன வீரப்பனின் அண்ணன்

இந்த நிலையில் மாதையனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறையில் உள்ள மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அவருக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *