250 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களிடையே இப்படம் வரவேற்பு பெறாதது குறித்து படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், அவர் அளித்த விளக்கம் தற்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. படம் குறித்து பேசிய சித்தார்த் ஆனந்த், “ 90% இந்தியர்கள் விமானத்தில் பயணித்தது கிடையாது.
பலர் விமான நிலையத்திற்கு கூட சென்றதில்லை. அப்படியிருக்கும்போது இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்? இதனால் ‘ஃபைட்டர்’ படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் திரையரங்கில் படத்தை பார்க்கும்போது இது ஒரு பேஸிக்கான படம் என்பதை புரிந்துகொள்வீர்கள்“ என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்துக்கு பலரும் சமூக வலைதளங்கில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours