தெலுங்கானா எல்லையில் பெண்கள் உள்பட 6 நக்சல்கள் சுட்டுக்கொலை!: ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் பறிமுதல்!!.,

Estimated read time 0 min read

தெலுங்கானா:

தெலுங்கானா மாநில எல்லையில் நக்சலேட்டுகள் மற்றும் காவல்துறை இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்ளிட்ட 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா,  சத்தீஸ்கர் மாநில எல்லையில், அடர்ந்த வனப்பகுதியில் நக்சலேட்டுகள் நடமாட்டம் குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினரை தாக்குவதற்காக அவர்கள் கையெறி குண்டுகளை தயாரித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தெலுங்கானாவில் நக்சல் தடுப்பு காவல்துறையினரும், சத்தீஸ்கர் மாநில காவல்துறையினரும் துணை ராணுவ படையினருடன் அப்பகுதியில் இன்று காலை கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைவிடம் ஒன்றில் இருந்து காவல்துறையினர் மீது நக்சலேட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த சண்டையில் 6 நக்சல் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 4 பேர் பெண்கள் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நக்சலேட்டுகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours