Kollywood Updates: போடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பெரும் கவனத்தை பெற்றவர், இயக்குநர் விக்னேஷ் சிவன். கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் தனது முதல் படத்திலேயே சிம்புவை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து, விஜய் சேதுபதி, சூர்யா என பெரிய நடிகர்களை வைத்தும் இயக்கி இவர், கடந்த 2022ஆம் ஆண்டில் நடிகை நயன்தாராவை மணந்துகொண்டார். இந்த ஜோடிக்கு உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) ஜாலியான இயக்குநராக தமிழ் சினிமாவில் அறியப்படும் நிலையில், தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு சிறிய இடைவெளியை அவர் எடுத்துக்கொள்வார். 2022ஆம் ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திற்கு பிறகு, இவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் நடிகர் அஜித்குமாரின் 62ஆவது படத்தை இயக்க இருந்தார்.
இருப்பினும், சில பிரச்னைகள் காரணமாக அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். மேலும், அஜித்தின் (Ajith Kumar) 62ஆவது படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டது, அதனை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அதில் இருந்து விலகிய பின் அவர் தற்போதுதான் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், LIC: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் குறித்த விளம்பரங்கள் சில நாள்களுக்கு முன் வெளியாகி இருந்தன. இந்த படத்தில் கோமாளி, லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
மேலும் படிக்க | ‘கில்லர் கில்லர்..’ கேப்டன் மில்லர் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!
இந்நிலையில் எல்ஐசி என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் எல்ஐசி தரப்பில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீஸில் எல்ஐசி என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். படத்திற்கு எல்ஐசி பெயரை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் மீது மக்களும் வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பொங்கலுக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் – அருண் விஜய் உருக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours