சென்னை:
பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ஜனவரி 12-ந் தேதி இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுநாள் (13-ந் தேதி) நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதேபோல் எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13-ந் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
மறுநாள் (14-ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் ரெயில் அதிகாலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
நெல்லையில் இருந்து 16-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 17-ந் தேதி காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட சீட்டுகள் அனைத்தும் வேகமாக நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.
+ There are no comments
Add yours