கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுகுறைந்து வருகிறது. சுகாதார துறை வெளியிட்ட பட்டியல் படி கோவையில் நேற்று புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 799 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 105 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 237 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர், 65 வயது ஆண் ஆகிய 2 பேர் இறந்தனர். இதன் மூலம் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,504 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 1,058 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: