சென்னை அடையாரில் நடந்த முதியோர் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு அங்குதான் ஷீத்தலை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி, `இவர்தான் என் மனைவி!’ என்றார்.
பப்லு மேடையில் இப்படிச் சொன்னதும், அவரை நன்கு தெரிந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனார்கள். ஏனெனில் அவருக்கு ஏற்கெனவே பீனா என்பவருடன் திருமணமாகி 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஆட்டிசம் குறைபாடு உடைய அந்த மகனை பப்லு மிகுந்த அன்போடு கவனித்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பலரும் அறிந்த ஒன்று.
பப்லு ஷீத்தலுடன் வாழத் தொடங்கியதுமே அவரின் முன்னாள் மனைவி பீனா தன் மகனைக் கூட்டிக் கொண்டு தனியே சென்று விட்டதாகச் சொன்னார்கள். நம் தளத்தில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தகவலை உறுதி செய்த பப்லு தொடர்ந்து ஷீத்தலுடன் சேர்ந்து யூ டியூப் சேனல்களுக்கு ஜோடியாக பேட்டிகள் தருவதும், பொது நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்தே கலந்து கொள்வதுமாக இருந்தார். அதேபோல் அடுத்த மாதமே வந்த தன்னுடைய பிறந்த நாளையும் ஷீத்தலுடன் சேர்ந்து பிரமாண்டமாகக் கொண்டாடினார்.
இருவருக்கும் வாழ்க்கை சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த சூழலில் இந்தாண்டு பிறந்த நாளை (கடந்த மாதம்) ஷீத்தல் இல்லாமல் கொண்டாடிய தகவல் வெளியில் வர, அப்போதுதான் இருவருக்குமிடையில் பிரச்னை என்கிற தகவல் வெளிவரத் தொடங்கியது. இன்னொரு பக்கம் பப்லுவுடன் சேர்ந்து தான் எடுத்திருந்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து முற்றிலுமாக நீக்கி, அங்கேயே பப்லுவுடன் தான் தற்போது தொடர்பிலில்லை என விவகாரத்தை வழிமொழியவும் செய்தார் ஷீத்தல்.தொடர்ந்து அது குறித்து யூ டியூப் சேனல்கள் சில அவரிடம் கேட்ட போது, ரொம்பவே கோபப்பட்டதுடன் சரியான பதிலையும் சொல்லவில்லை.
‘ஆமாங்க இவங்க கூடதான் நான் வாழுறேன், அதுல என்ன தப்பு’ என ஜோடியாகச் சேர்ந்து பேட்டி கொடுத்த போது தைரியமாகப் பேசிய பப்லு இப்போது ஷீத்தல் குறித்துப் பேசவே மறுத்தார்.
இவர்களிடையே பிரச்னை உருவானதற்குக் காரணம் என சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான கருத்தைச் சொல்லி வருகிற சூழலில் சமப்ந்தப்பட்ட அவர்களுக்கு மட்டுமே உண்மையான காரணம் தெரியும்.
இந்த நிலையில் நம்பகமான சோர்ஸ் மூலம் தற்போது நமக்கு கிடைத்த தகவல் என்னவெனில் ஷீத்தலைப் பிரிந்ததுமே நேராகத் தன் மகனைப் பார்க்கச் சென்ற பப்லு மறுபடியும் அவரைத் தன் வீட்டுக்கே கூட்டி வந்து விட்டார் என்பதுதான். பழையபடி மகனை அக்கறையாகக் கவனித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் பப்லு.
அவரிடம் யாராவது ஷீத்தல் என்ற பெயரை எடுத்தாலே, ச்ச்சீ, தள்ளு.. என்கிற ரீதியில் கடுப்பாகி ‘ரொம்பவே நொந்து போயிருக்கேன். தயவு செய்து கொஞ்ச நாளைக்கு எதுவும் பர்ச்னல் விஷயங்களைக் கேக்காதீங்க. சினிமா, சீரியல் பத்தி எதாவது பேசுங்க, பாலிவுட்ல படம் பண்ணி இப்ப அது நல்ல வசூலைத் தந்திருக்கு. அதைப் பத்திப் பேசலாம். இதை விட்டுட்டு திரும்பவும் 53 வயசு அது இதுன்னு கேட்டீங்கன்னா டென்ஷனாகிடுவேன்’ எனக் கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி விடுகிறாராம்.
+ There are no comments
Add yours