பெரியார் 48-வது நினைவுநாள்… சிந்தனை பொக்கிஷமாக திகழும் அவரது கருத்துக்கள்!.,

Estimated read time 1 min read

சென்னை:

பெரியாரின் 48-வது நினைவுதினமான இன்று, அவர் ஆற்றிய சொற்பொழிவுகளில் இருந்து சில வரிகள் மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம், மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு உள்ளிட்ட பெரியாரின் பொன்மொழிகள் பிரபலமானவை. ஆனால் அதே நேரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எண்ணத்தில் உதித்த, பெரும்பாலனவர்கள் அறியாத அவரது தீப்பொறி சிந்தனைகளில் சில மட்டும் இங்கே;

பெரியார் சிந்தனை

”பிச்சைக் கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்டவிரோத காரியமாக கருதப்பட வேண்டும். அப்படியானால் தான் மனிதன் சுயமரியாதையோடு வாழமுடியும்.” (குடி அரசு நாளிதழ் 21.04.1945) ”பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது லட்சியத்திற்கு கொடுக்கும் விலை” (விடுதலை நாளிதழ் 20.09.1962)

சுயமரியாதை சுடர்

”சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம் தான்.” (குடி அரசு 17.11.1940) ”நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாய துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில் தான் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும்.” (விடுதலை 26.08.1967)

குடி அரசு

”மதத்தை வைத்துக்கொண்டு சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று புறப்பட்ட ஒருவர் கூட இதுவரை ஒரு சிறிய வெற்றியை கூட பெற முடியவில்லை.” (குடி அரசு 07.04.1929) ”ஒரு சமூகம் என்றிருந்தால் அச்சமூகத்தில் ஏழைகள் இல்லாமலும், மனசாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வது தான் சரியான சமூக சீர்த்திருத்தப் பணியாகும்.” (குடி அரசு 30.01.1927)

அறிவுப்பேழை

”பொதுக்காரியத்தில் ஈடுபடுகிறவர் எவராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரத்திற்காக பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவரேயாவார்.” (அறிவுப் பேழை ; 1976) ”வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ, இல்லாதவன் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இவைகளை சீர்த்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..?” (குடி அரசு 04.05.1930).

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours