Janhvi Kapoor’s Spiritual Journey: Actress Visits Mahakaleshwar Temple with Rumored Beau and Director | ஜான்வி கபூர் காலதருடன் மகா காலேஷ்வர் கோயிலில் சாமி தரிசனம்..!

Estimated read time 1 min read

கோவில்களுக்குச் செல்வதை விரும்பும் ஜான்வி கபூர், திங்களன்று உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்றார். அப்போது ஜான்வி கபூர், காதலன் ஷிகர் பஹாரியாவுடன் கோவிலில் தென்பட்டார். அவர்களுடன் இயக்குனர் அட்லியும் இருந்தார். கோயிலில் ஜான்வி கபூர் இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். ஷிகர் பஹாரியா வெள்ளை நிற குர்தாவுடன் வந்திருந்தார். இதனை அங்கிருந்து ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்துக்கு “மகாகாலேஷ்வர் கோவிலில் ஜான்வி மற்றும் அட்லீ” என்று கேப்சன் கொடுத்திருந்தார்.

மேலும் படிக்க | மாரி சீரியல்: சூர்யா, மாரியை பொறி வைத்து பிடித்தாரா.. அடுத்து நடக்கப் போவது என்ன?

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா. ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா அடிக்கடி உணவகங்கள், பப்கள், பார்ட்டிகளில் காணப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் தங்கள் உறவு நிலையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்பு வைரலான ஒரு வீடியோவில், ஜான்வி கபூர் மும்பை தெருக்களில் உலா வந்ததை பார்க்க முடிந்தது. அப்போது, ஜான்வியுடன் அவரது காதலன் ஷிகர் பஹாரியாவும் வந்துள்ளார். வீடியோவில், ஷிகர் ஜான்விக்கு நடனமாடுவதை காட்டுவதைக் காணலாம். 

ஆகஸ்ட் மாதம், ரூஹி நட்சத்திரம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் சுவாமி கோயிலுக்குச் சென்றனர். அவர்களின் வருகையின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. வைரலான வீடியோக்களில், ஜான்வி, வயலட் புடவை உடுத்தி, கோவில் மைதானத்தை தலையால் தொட்டு வணங்குவதை நாம் காணலாம். ஜான்வியுடன் ஷிகர் பஹாரியாவும் பாரம்பரிய உடையில் காணப்பட்டார். 

ஜான்வி கடைசியாக பாவால் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்தார். ஜான்வி கபூர் அடுத்து ராஜ்குமார் ராவுடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படத்தில் நடிக்கிறார். ஜான்வி தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலி கானுடன் இணைந்து தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.

மேலும் படிக்க | சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்… பாதுகாப்பாக மீட்ட மீட்புப் படையினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours