ஆனால் டான் 3 படத்தில் ஷாருக் கான் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது மீண்டும் இருவரும் சேர்ந்து வேறு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் டான் 1, டான் 2 ஆகியோர் 17 ஆண்டுகளுக்கு மீண்டும் ஒன்று சேருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஷாருக் கானும் அதனை உறுதிபடுத்தும் விதமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஷாருக் கான்

ஷாருக் கான்

அமிதாப்பச்சனும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில், ஷாருக் கானுடன் சேர்ந்து நடிப்பது குறித்து மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் யாருடைய இயக்கத்தில் இருவரும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த செய்தி வெளியான நாளில், நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு வெளியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஷாருக்கான் உட்பட பாலிவுட் பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதோடு கடன் தொல்லையால் சிலர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.

இதையொட்டி பிரபலங்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஷாருக்கான் தற்போது ஆன்லைன் சூதாட்ட வெப்சைட் ஒன்றின் விளம்பர தூதராகவும் இருக்கிறார். ஷாருக்கானின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டு நிறுவனம் ஒன்று ஷாருக்கானின் வீட்டிற்கு வெளியில் போராட்டம் நடத்தியது. உடனே போலீஸார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். ஷாருக்கான் மட்டுமல்லாது, அஜய்தேவ்கன், ரகுல் பிரீத் சிங், கிரிக்கெட் வீரர்களும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கின்றனர். அவர்கள் வீட்டிற்கு வெளியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டோம். ஆனால் போலீஸார் கைது செய்து விட்டனர் எனப் போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *