How Much Is Rashmika Mandanna Net Worth and Salary | ராணி போல் வாழும் ராஷ்மிகா.. மலைப் போல் குவியும் சொத்து, சம்பளம்

Estimated read time 1 min read

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து விபரம்: தற்போது பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறாரா என வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

நடிகை ராஷ்மிகா மந்தனா:
கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்ட நாயகனாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமடைந்தயார் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இதன் பின்னர் தமிழ் ரசிகர்களுக்கு ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமானவர், நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் இதற்கு முன்னரே அவர் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்தார். சுல்தான் படத்தையடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவல்லி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் மிகப் பிரபலம் அடைந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கடைசியாக சமீபத்தில் விஜய்யுடன் சேர்ந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அழகான நடிகையாக மட்டுமன்றி ரசிகர்களை நன்கு மதிக்கும் நடிகையாகவும் வலம் வருகிறார், ராஷ்மிகா. இவருக்கு “நேஷனல் க்ரஷ்” என்ற இன்னொரு பெயரும் உண்டு.

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்! ஷக்தி வைத்த ஆப்பு.. புஷ்பா செய்த சத்தியம்

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் அடுத்தடுத்த படங்கள்:
தற்போது பாலிவுட்டிலும் இவர் ‘அனிமல்’ (Animal) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. புஷ்பா திரைப்படத்தின் 2வது பாகமாக உருவாகும் புஷ்பா 2 – தி ரூல் (Pushpa 2: The Rule) திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தின வெளியீடாக புஷ்பா-2 திரைப்படம் ரிலீஸ் ஆகயுள்ளது. இதனிடையே தெலுங்கில் ரெயின்போ எனும் புதிய திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர், தி கேர்ள் ஃப்ரெண்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வரும் நடிகை ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு மற்றும் ஒரு படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் (Rashmika Mandanna Networth and Salary Details) எவ்வளவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு – சம்பள விபரம்:
இந்நிலையில் இவர் நடிக்கும் படத்திற்கு 60 லட்சம் முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு 68 கோடிக்கும் மேல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூர், மும்பை, கோவா என முக்கியமான நகரங்களில் இவருக்கு பிளாட் இருக்கிறது, இதில் மும்பையில் மட்டும் இரண்டு பிளாட் வாங்கியுள்ளார். இதனுடன் இவரிடம் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ்-சி மற்றும் 40 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ3 கார்கள் மட்டுமே உள்ளது, சாதாரண டொயோட்டா கார் ஒன்றையும் ராஷ்மிகா மந்தனா அடிக்கடி பயன்படுத்தி வருகிறாராம்.

மேலும் படிக்க | 18 வயதில் பல கோடிக்கு அதிபதி.. விக்ரமின் ரீல் மகள் சாராவின் சொத்து மதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours