LEO: “உங்கள் அன்புக்கு நன்றி கேரளா…” – கேரள ரசிகர்கள் வெள்ளத்தில் லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj watches Leo movie in Palakkad with fans

Estimated read time 1 min read

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்துவரும் இப்படம், சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. இதற்கிடையில் இதன் முதல் நாள் வசூலே 148.5 கோடி எட்டியதாகப் படக்குழு அறிவித்தது. தற்போது படம் வெளியாகி 6 நாள்களான நிலையில் இப்படம் இதுவரை 400 கோடியைத் தொட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர். மேலும், ஹாலிவுட்டில் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ நடித்த மார்ட்டின் ஸ்கோர்செஸியின், ‘Killers of the Flower Moon’ படத்தின் முதல் நான்கு நாள் வசூல் சாதனையை ‘லியோ’ முறியடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.

இதற்கிடையில் ‘லியோ’ வெளியானது முதல் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார் இயக்குநர் லோகேஷ். அந்த வகையில் இன்று கேரளா, பாலக்காட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் ‘லியோ’ படம் பார்த்தார். அங்கு, ரசிகர்கள் வெள்ளத்தில் அவர் எடுத்த செஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours