இதில் ஷாருக்கான் மட்டுமல்லாது இயக்குனர் அட்லீ, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிரூத், தீபிகா படுகோன் உட்பட படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ஷாருக்கான் பாடலுக்கு நடனமும் ஆடி உற்சாகப்படுத்தினார்.
இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஷாருக்கானை பார்க்க நேற்று மாலையில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரது மும்பை வீட்டின் முன்பாக கூடியிருந்தனர். வழக்கமாக விழாக்காலங்களில் மட்டுமே தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை சந்திப்பது ஷாருக்கான் வழக்கம். ஆனால் நேற்று தனது படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஷாருக்கான் தனது மன்னத் பங்களாவின் பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
வழக்கமாக ரசிகர்களுக்காக கொடுக்கும் போஸ் கொடுத்தார். பதான், இதனால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.