படம் எடுப்பதுதான் என் கையில் இருக்கிறது. திரையரங்கு விநியோகம், டிக்கெட் பிரச்னை எல்லாம் என் கையில் இல்லை. படம் எடுப்பதை விட அது ரிலீஸாகும்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறது. பெரிய படங்களுக்கு நடக்கும் இயல்பான பிரச்னைகள்தான் இவை
இசை வெளியீட்டு இடையில் நிறுத்தப்பட்டதற்குக் காரணம்; 6,000 டிக்கெட்கள் வைத்திருந்தோம், ஆனால், 70,000 – 80,000 டிக்கெட்கள் போலியாக புக் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். இதற்குமுன் நடந்த ‘இசை விழாவில்’ இதனால்தான் ஒரு பெரிய பிரச்னை வந்தது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கவே இசை வெளியீட்டு விழாவை வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். படம் வெளியாகும் சமயத்தில் நெகட்டிவாக பெரும் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்துவதையும் இதனால்தான் தவிர்த்தோம்.
மேலும், இவற்றையெல்லாம் விட படத்தின் வேலைகளை சரியாகச் செய்ய வேண்டும். அதைச் செய்துமுடிப்பதில்தான் எங்கள் முழு கவனமும் இருந்தது.
இப்படம் ‘LCU’ என உதயநிதி சார் ட்வீட் பதிவிட்டிருந்தார். அதன் பக்கத்தில் ஒரு கண்ணடிக்கும் எமோஜியும் போட்டிருந்தார். அது சஸ்பன்ஸ், படத்தை பார்த்தால் உங்களுக்கேத் தெரியும். நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும், எல்லோக்கும் சரியான ஸ்கீரின் ஸ்பேஸ் இருக்கு. மொத்த படத்தையும் விஜய் சார் தாங்கியிருக்கிறார். ” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours