குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் உபகரணங்கள் பழுதடைவதால்பொதுமக்கள் கடும் அவதி
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுகிராமம் பகுதியில் மின்னழுத்த குறைபாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்னழுத்த குறைபாட்டால் மின்சார உபகரணங்கள் சரிவர இயங்காமல் பழுதடைவதாகவும் மின் விளக்குகள் சரி வரை எரியாமலும் உள்ளதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர். சில நேரங்களில் மின் அழுத்தம் அதிகமாக குறை படும்போது முக்கிய மின்சார உபகரணங்கள் செயல்படாமல் முடங்கிப் போவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மின்சார குறைபாடுக்கு காரணமான டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஏற்கனவே மீண்டும் பழைய டிரான்ஸ்பார்மரை நிவர்த்தி செய்து வைத்ததாகவும் தற்போது அதனால் தொடர்ந்து மின் அழுத்த குறைபாடு நிலவி வருவதாகவும் இதனால் வீட்டு உபயோகத்திற்கான மின்சார பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் இதனால் பண நஷ்டம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அப்பகுதியில் மின்னழுத்த குறைபாடு ஏற்பட்டு வருவதாகவும் அதை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் அழுத்த குறைபாடு ஏற்படாமல் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புதுகிராமம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
+ There are no comments
Add yours