படத்தில் இந்தக் கதாபாத்திரங்கள் போக, மூடர்கூட கேங்காக வரும் ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், வில்லனாக வரும் ஜான் விஜய், விஞ்ஞானியாக வரும் ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக வரும் பல்லக் லல்வானி, யோகி பாபுவின் காதலியாக வரும் ‘மைனா’ நந்தினி, ஹெச்.ஆராக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா என சுந்தர்.சி படப் பாணியில் பலரையும் லாரியில் ஏற்றிக் கூட்டி வந்திருக்கிறார்கள்.
ரோபோ சங்கர் அண்ட் கேங் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் நம்மைச் சோதிக்கிறார்கள்; ஜான் விஜய்யும் அவர் பங்கிற்கு அவரின் டெம்ப்ளேட் பாணியில் வசனம் பேசிக் கடுப்பாக்குகிறார். பிரதான நடிகையாக ஹன்சிகா இருந்ததால் பல்லக் லல்வானி படத்திலிருந்ததே தெரியாமல் போகிறது. ரவி மரியாவுக்கு அவர் ஏற்கெனவே நடித்த ‘தேசிங்கு ராஜா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படங்களைப் போன்ற ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும், ஓரளவுக்குச் சமாளித்திருக்கிறார். முனிஷ்காந்த்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
+ There are no comments
Add yours