‘பாக்கியலட்சுமி’ தொடருக்கென தமிழ் சீரியல் உலகில் தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. சமீபத்தில் இந்தத் தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சதீஷ் தொடரில் இருந்து விலகப் போவதாக அவருடைய சமூகவலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார்.
விருது நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்படாததே அவர் விலகலுக்குக் காரணம் எனவும் சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. பிறகு அவரே தொடர்ந்து நடிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
கோபி கதாபாத்திரம் மாற்றப்படும் என்றதுமே அவருடைய இடத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் அந்தக் கதாபாத்திரத்திற்கு நிச்சயம் பொருத்தமாக இருக்க மாட்டார் என்கிற தகவலும் பரவி வந்தன. தற்போது அந்தத் தொடரில் இருந்து அமிர்தா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ரித்திகா விலகியிருக்கிறார்.
ரித்திகா விலகியதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. அவர் விலகியது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. அவருக்கு பதிலாக அக்ஷிதா நடிக்கும் காட்சிகளும் ஒளிபரப்பாகாத நிலையில் கோபி ரித்திகா விலகியது குறித்து மறைமுகமாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், `எங்கிருந்தாலும் வாழ்க!’ என்கிற கேப்ஷனையும் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ரித்திகா தொடரில் இருந்து விலகியிருப்பது உறுதியாகியுள்ளது.
+ There are no comments
Add yours