மலேசியாவில் வசூல் சாதனை படைத்த ரஜினியின் ’ஜெயிலர்’ | Jailer creates history and becomes the no1 grosser of Indian cinema in Malaysia

Estimated read time 1 min read

கோலாலம்பூர்: மலேசியாவில் மற்ற இந்தியப் படங்களின் வசூலை ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உயர் ரக சொகுசு கார்களை பரிசளித்தது.

இந்த நிலையில், மலேசியாவில் மற்ற இந்தியப் படங்களின் வசூலை ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக அப்படத்தை மலேசியாவில் வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை ‘ஜெயிலர்’ மலேசியாவில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் மலேசியாவில் அதிகம் வசூலித்த இந்தியப் படமாக ஷாருக்கானின் ‘தில்வாலே’ படம் இருந்து வந்தது. தற்போது அப்படத்தின் வசூல் சாதனையை ‘ஜெயிலர்’ முறியடித்துள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours