குழந்தை வளர்ப்புப் பற்றி பேசியுள்ள அவர், “நாங்கள் குழந்தைகளை மதிக்கிறோம். அவர்களை சுதந்திரமாகவும், தனிப்பட்டவர்களாகவும் இருக்க அனுமதிக்கிறோம். அப்போதுதான் அவர்கள் தங்களுக்குள் தங்களை கண்டுபிடிப்பார்கள். தங்கள் சொந்தப்பாதையை தாங்களே தேர்ந்தெடுப்பார்கள். குழந்தைகள் மிகவும் நெகிழ்வானவர்கள். என் வாழ்க்கையை என் குழந்தைகளுடன் வாழவே விரும்புகிறேன். அவர்களுடன் இணைந்து எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறேன். குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்க்க வேண்டும் என நினைத்தால் முதலில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் வாழ்க்கை செழிக்கும். நம் மன ஆரோக்கியத்துக்கு நாம்தான் பொறுப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

சைஃப் அலிகான்-கரீனா கபூர்

சைஃப் அலிகான்-கரீனா கபூர்

மேலும், “நான் என் குடும்பம், குழந்தைகள், கணவர், என் ஐந்து நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளேன். இவர்கள்தான், இவ்வளவுதான் என் வாழ்க்கை. எனக்கு இவர்கள் வேண்டும். என்னுடைய முதல் நாள் ஷூட்டிங் முதல் இப்போது வரை என் உதவியாளர் என்னுடன்தான் உள்ளார். நான் அவர்களை போகச் சொல்லவில்லை, அவர்களும் என்னை விட்டுப் போக மாட்டார்கள். என் உலகில் எனக்கான மனிதர்களுடன் இருப்பதால்தான், பெரும்பாலான பார்ட்டிகளில் கலந்துகொள்வதில்லை. விருந்துகளில் கலந்துகொள்வது, நண்பர்களை சேர்ப்பது, சோஷியலைசிங்கில் எனக்கு விருப்பம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: