சென்னை;
சென்னை அருகே கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியரை பிடித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஜல்லடையான் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பேராசிரியராக பணிபுரிபவர் ஆபிரகாம் அலெக்ஸ் (48). இவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் இரண்டுபேர் கடந்த 6 ஆம் தேதி கல்லூரி துறை தலைவர் பத்மநாபனிடம் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக கல்லூரி நிர்வாக பொறுப்பாளர் ஷீலா மேரி விசாரணை செய்துள்ளார். ஆனால் பேராசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த பள்ளிகரணை போலீசார் கல்லூரி சென்ற போது மாணவிகள் இருவரும் போலீசாரிடம் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக புகாரளித்தனர். இதை அடுத்து போலீசார் கல்லூரி முதல்வர் ராம்நாதன் மற்றும் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்ட பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours