சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெடிபொருட்களுடன்
நின்ற உதய தாஸ் என்பவரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் அன்பு குமரன், கிருஷ்ணமூர்த்தி, சிவனேஸ்வரன், சுரேஷ்குமார், மகேஸ்வரன் ஆகிய 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். மேலும் அவர்கள் தயாரித்த வெடி குண்டுகளை பண்ருட்டி அருகே உள்ள முந்திரி காட்டில் வெடிக்க செய்து பயிற்சி செய்த வீடியோ அடங்கிய மடிக்கணினியின் சிக்கியது. இதனையடுத்து விடுதலைப்புலி ஆதரவாளர்களான இவர்கள் இலங்கை போரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் எண்ணத்தில் இத்தகைய வேலையை செய்ததும் தெரியவந்தது. பின்னர் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதய தாஸ், சுரேஷ் குமார், கிருஷ்ணமூர்த்தி,
மகேஸ்வரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின்
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அன்பு குமரன் மற்றும் சிவனேஸ்வரன் ஆகிய
இருவரும் தப்பி வெளிநாடு ஓடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜீவன்
+ There are no comments
Add yours