சென்னை: நடிகர் மாதவனுடன் கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம் இன்று சென்னையில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

‘சந்திரமுகி 2’, ‘தேஜஸ்’ ஆகிய இரண்டு படங்களும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு தோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்து அவர் நடிப்பில் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய்யும் நடிகை கங்கனா ரனாவத்தும் புதிய படம் ஒன்றுக்காக கைகோத்துள்ளனர். தலைப்பிடப்படாத இப்படத்தில் மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சைக்காலஜி த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், “படப்பிடிப்பு தளக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். என்ன ஓர் அற்புதமான தருணம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகை கங்கனா பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: