ஈர்க்கும் சக்திஸ்ரீ கோபாலன் குரல் – ‘பொன்னியின் செல்வன் 2’ பட ‘அக நக’ பாடல் எப்படி? | Karthi Trisha starrer mani ratnam ponniyin selvan part 2 aga naga song

Estimated read time 1 min read

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அக நக’ பாடல் வரும் வெளியாகி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘அக நக’ பாடல் முதல் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இப்பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடலை பாடியிருக்கிறார்.

பாடல் எப்படி? – ஏற்கெனவே ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’-ல் ‘அக நக முக நக முறுநகையே’ என்ற இந்தப் பாடல் சிறிய வெர்ஷனாக வந்தாலும், தற்போது முழுப் பாடலும் வெளியாகியிருக்கிறது. சக்திஸ்ரீ கோபாலின் குரல் தெளிந்த நீரோடை போல பயணிக்க ‘நடை பழகிடும் தொலை அருவிகளே… முகில் குடித்திடும் மலை முகடுகளே’ என பாடலை தனது வரிகளால் பட்டை தீட்டியிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன். மெய் மறக்கும் ரஹ்மானின் மெலோடி இசை ஈர்ப்பு. வந்தியத்தேவனுக்கு, குந்தவைக்கும் இடையிலான சொல்லப்படாத காதலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள இப்பாடல் ரசிக்க வைக்கிறது. பாடல் வீடியோ:

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours