சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில், சமீபத்தில் தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது மூத்த மகன், அதிகவேக சூப்பர் பைக் ஒன்றை ஓட்டக் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. 17 வயதாகும் அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்தனர்.
+ There are no comments
Add yours