<p>தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபு, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p>
<p>அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு நேற்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபு தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், அறுவை சிகிச்சைக்கு பின்னால் மேற்கொள்ளப்படும் பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபு விரைந்து நலம் பெற ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். </p>
+ There are no comments
Add yours