தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை

Estimated read time 0 min read

முதலமைச்சர் நடவடிக்கைக்கு நன்றி .

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மூன்று, நான்கு மாதங்களாக ஊதியம் (கூலி) வழங்கப்படால் ஒன்றிய அரசிடம் நிலுவையாகத் தேங்கியுள்ளது. ஊதியப் பாக்கியை வழங்க வலியுறுத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கான நிதியை, பாஜக ஒன்றிய அரசு காலமுறைப்படி வழங்காமல் இழுத்தடித்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் இந்தத் துயர நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையான வாழ்க்கை நெருக்கடிக்க தள்ளப்பட்டுள்ளனர். .

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சுமார் ரூ 2000 கோடி உடனடியாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் போராடி வருகின்றன. இது தொடர்பாக சென்ற 31.10.2021 ஆம் தேதி மின் அஞ்சல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை சிரமங்களை அறிந்த முதலமைச்சர் தளபதி திரு. மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஒன்றிய அரசை தொடர்பு கொண்டு, வேலை உறுதியளிப்புத் திட்ட நிதிப்பாக்கியை வழங்க வற்புறுத்தியிருப்பதுடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு 01.11.2021 ஆம் தேதி விரிவான கடிதம் எழுதியுள்ளார்.

விவசாயத் தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து. அவர்களது ஊதியப் பாக்கியை பெற்று வழங்க, விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர் குக்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் உணர்வுபூர்வ நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், பாஜக ஒன்றிய அரசு நூறு நாள் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதியப்பாக்கித் தொகை முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தங்களன்புள்ள,

(நா பெரியசாமி)
பொதுச்செயலாளர்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்
தொடர்புக்கு : 94431 18544

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours